தர்மபுரி நகரில் டிரோன் கேமரா மூலம் மக்கள் நடமாட்டம் கண்காணிப்பு-போலீசார் நடவடிக்கை

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் இன்று முதல் 2 வாரம் முழு ஊரடங்கு பிறக்கப்பட்டுள்ளதால், தர்மபுரி நகரத்தில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதிதை, போலீசார் ஆளில்லா குட்டி விமானம் மூலம் (டிரோன் கேமரா) மூலம் கண்காணித்தனர்.தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க இன்று (10ம் தேதி) முதல் வரும் 24ம் தேதி வரை 2 வாரம் முழு ஊரடங்கு பிறக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று ஊரடங்கு என்பதால், நேற்று தர்மபுரி கடைவீதியில் பலசரக்கு கடைகள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலை மோதியது. ஜவுளிக்கடையிலும், பஸ் ஸ்டாண்டிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து மக்கள் கூட்டத்தை கண்காணிக்க, தர்மபுரி டவுன் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் ஆளில்லா விமானம் மூலம் (டிரோன் கேமரா) கண்காணித்தனர்.

ஆறுமுகம் தெரு, சின்னசாமிதெரு, முகமதுஅலி கிளப்ரோடு, அப்துல் முஜிப்தெரு, துரைசாமி தெரு, கடைவீதி, நேதாஜி பை-பாஸ் சாலை, புறநகர் மற்றும் நகர பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் டிரோன் கேமரா பறக்கவிட்டு போலீசார் கண்காணித்தனர். மேலும் இன்று (10ம் தேதி) முதல் முழு ஊரடங்கு தொடங்குவதால் போலீசார் இந்த ஆளில்லா விமானத்தை பறக்கவிட்டு ஆய்வு செய்யவுள்ளனர்.

Related Stories:

>