×

நாடு முழுவதும் முக்கிய தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசியின் விலை 6 மடங்கு உயர்வு!!

டெல்லி : நாடு முழுவதும் முக்கிய தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசியின் விலை 6 மடங்கு உயர்த்தப்பட்டு இருப்பது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. உலகின் ஏராளமான நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு இலவசமாக தடுப்பூசியை வழங்கி வருகின்றன. சில நாடுகளில் மட்டும் தடுப்பூசிகள் விலைக்கு மட்டுமே கிடைத்துள்ளன. அந்த நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியா உலகிலேயே அதிக விலைக்கு தடுப்பூசி கிடைக்கும் நாடு என்ற பெயரை பெற்றுள்ளது. பூனேவில் சீரம் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்டு வரும் கோவிஷீல்டு தடுப்பூசி தற்போது தனியார் மருத்துவமனைகளில் 700 ரூபாயில் இருந்து 900 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஐதராபாத்தில் உள்ள பாரத் பையோடெக் நிறுவனம் உற்பத்தி செய்யும் கோவாக்சின் தடுப்பூசி 1250 ரூபாயில் இருந்து 1500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு இவ்விரு தடுப்பூசிகளையும் மத்திய அரசு 150 ரூபாய்க்கு கொள்முதல் செய்தது. ஆனால் கூடுதல் விலை கொடுத்து மாநிலங்கள் கொள்முதல் செய்யலாம் என்றும் அறிவித்தது. ஆனால் இவற்றை விலைக்கு வாங்கும் தனியார் மருத்துவமனைகள் இருப்பு வைக்க ஆகும் செலவு, ஜிஎஸ்டி வீணாவதால் ஏற்படும் நஷ்டம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அதிகவிலைக்கு விற்பனை செய்து வருகின்றன. நாடு முழுவதும் தொற்று பரவல் எண்ணிக்கை சற்றே குறைந்தாலும் உயிரிழப்பு எண்ணிக்கை 1% அதிகரித்துள்ளது.


Tags : தனியார் மருத்துவமனை
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...