×

பின்தங்கிய நாடுகளுக்கு எட்டாக்கனியாக மாறும் தடுப்பூசி!: ஆப்ரிக்க நாடுகளுக்கு இன்னும் தடுப்பூசி கிடைக்கவில்லை என WHO கவலை..!!

ஜெனிவா: முன்னேறிய நாடுகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் பின்தங்கிய நாடுகளுக்கு இன்னும் தடுப்பூசி கிடைக்கவில்லை என உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து பல்வேறு முன்னேறிய நாடுகள் தடுப்பூசியை கண்டறிந்து அதை மக்களுக்கு செலுத்தி வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்களது நாட்டு மக்களுக்கு தடுப்பூசியை வழங்கி வருகின்றன. 


இந்த நிலையில் 10க்கும் மேற்பட்ட பின்தங்கிய நாடுகளுக்கு இன்னும் தடுப்பூசி கிடைக்கவில்லை என உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக ஆப்ரிக்க நாடுகளுக்கு இன்னும் தடுப்பூசி கிடைக்கவில்லை. அங்கு ஏராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வரும் அவல நிலை உள்ளது. மத்திய ஆப்ரிக்காவில் உள்ள சாட் நாட்டை சேர்ந்த ஒரு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிகிச்சை மையத்தில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கூட இன்னும் வைரஸ் தடுப்பூசி கிடைக்கவில்லை.


வளமான நாடுகள் தங்களுக்கான கொரோனா தடுப்பூசியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து மக்களுக்கு செலுத்தி வரும் நிலையில், சாட் போன்ற ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி என்பது இன்னும் எட்டா கனியாகவே உள்ளது என உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இந்த சூழலில் மிகவும் பின்தங்கிய ஆப்ரிக்க நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் கிடைக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி தராவிட்டால் அந்த நாடுகள் மேலும் பின்தங்கிவிடும் எனவும் கொரோனா பாதிப்பு அங்கு அதிகரித்துவிடும் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. 



Tags : African country, vaccine, WHO concern
× RELATED சமூக நீதி கருத்தரங்கில் இந்தியா...