ரஷ்யாவில் வெற்றி தின கொண்டாட்டம் கோலாகலம்!: போர் விமானங்களின் சாகசம், வாணவேடிக்கைகளால் உற்சாகம்..!!

மாஸ்கோ: ரஷ்யாவில் ஹிட்லரின் படைகளை வெற்றி கொண்டதின் 76வது ஆண்டு விழா வழக்கமான உற்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஹிட்லருக்கு எதிரான போரில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. வெற்றி தின கொண்டாட்டமானது மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்திலும் களைகட்டியது. மாஸ்கோவில் புகழ்பெற்ற செஞ்சதுக்கத்தில் 12 ஆயிரம் வீரர்கள் கொண்ட பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெற்றது. 

ரஷ்யாவில் ராணுவ வலிமையை உலகிற்கு பறைசாற்றும் வகையில் அதிநவீன டேன்குகள், பீரங்கிகள், கவச வாகனங்கள் அணு ஆயுத ஏவுகணைகள் போன்றவை அணிவகுத்து சென்றன. அதன் தொடர்ச்சியாக ரஷ்யாவில் தயாரான போர் விமானங்கள் வானில் பறந்து பல்வேறு சாகசங்களை செய்து காட்டின. மாஸ்கோவில் வெற்றி தின கொண்டாட்டத்தின் நிறைவாக கண்கவர் வான வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. வானில் வர்ணஜாலம் காட்டிய பட்டாசுகள் மக்களின் மனங்களை கொள்ளையடித்து சென்றன. 

Related Stories:

>