இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டிய சீனா!: ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்கள், வெண்ட்டிலேட்டர்கள் அனுப்பி வைத்தது!!

பெய்ஜிங் : கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்து வரும் இந்தியாவிற்கு சீன செஞ்சுலுவை சங்கம் உதவிக்கரம் நீட்டியுள்ளது. நேற்று சீனாவின் சஞ்சு என்ற இடத்தில் இருந்து ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்கள், வென்டிலேட்டர்களை அந்நாட்டு செஞ்சுலுவை சங்கத்தினர் அனுப்பி வைத்தனர். அதன்படி முதற்கட்டமாக 100 ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்கள், 40 வென்டிலேட்டர்கள் மற்றும் தொற்று தடுப்பு மருந்துகள் நேற்று விமானம் மூலமாக இந்திய வந்தடைந்தன.

இது சீனாவால் இந்தியாவிற்கு வழங்கப்பட்ட முதல் பெரும் மருத்துவ உதவியாகும். அத்துடன் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள இந்திய செஞ்சுலுவை சங்கத்திற்கு ரூ. 7 கோடியே 32 லட்சம் ரூபாய் நிதி விரைவில் ரொக்கமாக அனுப்பிவைக்கப்பட்ட உள்ளது. இந்த தகவலை இந்தியாவிற்கான சீன தூதர் தெரிவித்துள்ளார். இதனிடையே கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை சீனாவிடம் இருந்து இந்திய நிறுவனங்கள் 40 ஆயிரம் ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்களை ஆர்டர் செய்துள்ளனர். இவற்றில் 21,000 கான்சென்ட்ரேட்டர்கள், 5000 வென்டிலேட்டர்கள், 2 கோடியே 10 லட்சம் முகக்கவசங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அத்துடன் சீனாவில் இருந்து 3,700 டன் மருந்துகள் இயக்குமதி செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

>