கஞ்சா விற்ற 4 பேர் கைது

அண்ணாநகர்: கோயம்பேடு ரயில் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கோயம்பேடு போலீசாருக்கு  நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு,  சந்தேகத்திற்கிடமாக, சுற்றி திரிந்த  ஒரு சிறுவன் உள்பட 4 பேரை  போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் நெற்குன்றம் பகுதியை சேர்ந்த பார்த்திபன்(28), விக்னேஷ்வரன்(20), வசந்த்(19) மற்றும் 16 வயது சிறுவன்  என்பதும், இவர்கள் தினமும் ரயில் நகர் பகுதியில் இரவு நேரங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து, கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, 4 பேரையும் கைது செய்தனர்.

Related Stories:

>