திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் ரமணரின் 71ம் ஆண்டு ஆராதனை

திருவண்ணாமலை: மதுரை அடுத்த திருச்சுழியில் அவதரித்து, அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையை தரிசித்த மகான் ரமணர். ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேய்பிறை திரயோதசி 11ம் நாள் பகவான் ரமணரின் ஆராதனை நிகழ்ச்சி  நடைபெறும். அதன்படி, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள ரமணாஸ்ரமத்தில் ரமணரின் 71வது ஆராதனை நிகழ்ச்சி பக்தர்களின்றி நேற்று நடந்தது. அதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு ருத்ர ஜெபம் நடந்தது. பின்னர், சிறப்பு  அலங்காரம், தீபாராதனை, சிறப்பு தமிழ் பாராயணம் ஆகியவை தொடர்ந்து நடந்தது.

Related Stories: