அன்னையர் தினத்துக்காக சிறப்பு கூகுள் டூடுல்

புதுடெல்லி: அன்னையர் தினத்தை முன்னிட்டு  அன்னையர்களை கவுரவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு சிறப்பு நிகழ்வுகளும் கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டு கவுரவிப்பது வழக்கமாகும். ஒவ்வொரு ஆண்டும் மே இரண்டாவது ஞாயிறு அன்னையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. உலகம் முழுவதும் அன்னையர் தினம் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கூகுள் நேற்று சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது. தாய்மார்கள் பூமியில் கடவுளின்  வெளிப்பாடாகும். நம்மை கவனித்துக்கொள்வதோடு, நம்மை சிறந்த நபராக உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பவர் நமது அன்னையே. எனவே உலக தாய்மார்களுக்கு வாழ்த்து மடல் போன்ற சிறப்பு டூடுலை கூகுள் நேற்று வெளியிட்டது.

Related Stories: