நியூயார்க்கில் துப்பாக்கி சூடு குழந்தை உட்பட 3 பேர் காயம்: மர்ம நபர்களுக்கு வலை

நியூயார்க்:  அமெரிக்காவின் நியூயார்க்கில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4வயது குழந்தை உட்பட மொத்தம் 3 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் வழக்கம் போல் பொதுமக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்பட்டது.  பொதுமக்கள் சிலர் ஆங்காங்கே கடைகளில் பொருட்கள் வாங்குவதில் கவனமாக இருந்தனர். இந்நிலையில் மர்மநபர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. இந்த துப்பாக்கி சூட்டில் கடையில் பொம்மை வாங்கி கொண்டிருந்த 4 வயது பெண் குழந்தை, இரண்டு பெண்கள் காயமடைந்தனர். உடனடியாக மீட்கப்பட்ட அவர்கள் மன்ஹட்டான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உயிருக்கு ஆபத்து இல்லை என  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது.  

Related Stories:

>