×

பிரதமர் மோடிக்கு மம்தா கடிதம்: மருத்துவ உபகரணங்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்

கொல்கத்தா: கொரோனா மருத்துவ உபகரணங்கள், அத்தியாவசிய மருந்துகளுக்கு ஜிஎஸ்டி உள்ளிட்ட அனைத்து விதமான வரிவிலக்கு அளிக்க வேண்டுமென மேற்கு வங்க முதல்வர் மம்தா, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில்  கூறியிருப்பதாவது: ஏராளமான நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகள், சிலிண்டர்கள் உள்ளிட்டவற்றை நன்கொடையாக வழங்குவதற்கு முன்வந்துள்ளன. இவர்களில் பெரும்பாலானவர்கள் கலால் வரி, மத்திய ஜிஎஸ்டி வரி, மாநில ஜிஎஸ்டி வரி மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி உள்ளிட்டவற்றில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தியுள்ளனர். இதவை மத்திய அரசின் பொறுப்பில் வருவதால், கொரோனா மருந்து மற்றும் மருத்துவ பொருட்களுக்கு அனைத்து விதமான வரி விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு கூறி உள்ளார். இதற்கு டிவிட்டரில் பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘5% ஜிஎஸ்டி வரி விலக்கு அளித்தால் உற்பத்தியாளர்களால் இன்புட் வரி கிரெடிட் பெற முடியாது. அதனால், மருத்துவ பொருட்களின் விலை அதிகரிக்குமே தவிர, மக்களுக்கு எந்த பலனும் கிடைக்காது’’ என கூறி உள்ளார்.



Tags : Mamata Banerjee ,Modi , Mamata's letter to Prime Minister Modi: Tax exemption for medical equipment
× RELATED பெண்கள் பற்றி இழிவான பேச்சு பாஜ எம்பி,...