வாரத்தில் 288 மின்சார ரயில்கள் மட்டுமே இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னையில் 480 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் வார நாட்களில் இனி, 288 மின்சார ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால், இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை சென்னையில் 288 மின்சார ரயில் சேவைகள் இயக்கபடுகிறது. அதன்படி, சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் இடையே 98 மின்சார ரயில் சேவையும், சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி இடையே 50 மின்சார ரயில் சேவையும், சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே 40 மின்சார ரயில் சேவையும், கடற்கரை செங்கல்பட்டு, திருமால்பூர் இடையே 88 மின்சார ரயில் சேவையும், ஆவடி-பட்டாபிராம் இடையே 12 மின்சார ரயில் சேவையும் என 288 சேவைகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை வார நாட்களில் இயக்கப்படுகிறது. இந்த மின்சார ரயிலில் ஏற்கனவே அறிவித்தப்படி அத்தியாவசிய பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் மட்டும் உரிய ஆவணங்களுடன் பயணிக்கலாம். இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>