×

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முழு ஊரடங்கிற்கு தொழில்துறையினர் ஒத்துழைப்பு தர வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முழு ஊரடங்கிற்கு தொழில்துறையினர் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டியளித்துள்ளார். தொழில்துறையினர் மற்றும் வணிகர்களுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரக்கூடிய நிலையில் கொரோனா சங்கிலியை உடைக்கும் நோக்கத்துடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்படுவதன் மூலமாக தொற்றின் வேகத்தினை குறைப்பதற்கும், கொரோனா சங்கிலியை முற்றிலுமாக அறுபட செய்வதற்கும், பொதுமக்கள், வணிக அமைப்புகள், தொழில் அமைப்புகள் இதற்கான ஒத்துழைப்பை அளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் மே 11ஆம் தேதி முதல் கிடைக்கும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் மூலம் தமிழகத்திற்கு 31 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க தொழில்துறை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். 35 மெட்ரிக் டன் என்ற உற்பத்தியை 70 மெட்ரிக் டன்னாக உயர்த்துமாறு ஸ்டெர்லைட்டிடம் கேட்டுள்ளதாக தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தனியார் நிறுவனங்களிடம் ஆக்சிஜன் உற்பத்திக்காகவும் அதை பெறுவதற்காகவும் அதிகாரி நியமிக்கப்படுவர் என்றும் வரும் காலகட்டத்தில் ஆக்சிஜன் தேவையை நிவர்த்தி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று பரவல் சங்கிலி அறுபடுவதில் தான் ஊரடங்கின் வெற்றி அடங்கி உள்ளது என்று தங்கம் தென்னரசு பேட்டியளித்துள்ளார்.



Tags : Corona , corona
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...