×

மும்பை, ஐதராபாத்திலிருந்து விமானங்களில் மேலும் 7.55 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்தன..!

சென்னை: தமிழகத்திற்கு மேலும் 7 லட்சத்து 55 ஆயிரத்து 530 தடுப்பூசிகள் மும்பை,ஹைதராபாத்திலிருந்து விமானங்களில் சென்னை வந்தது. தமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக,கூடுதலாக தடுப்பூசிகளை மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சா் ஸ்டாலின் பிரதமா் மோடிக்கு கோரிக்கை விடுத்தாா்.அதை ஏற்று மத்திய அரசுக்கு கூடுதலாக தடுப்பூசி மருந்துகளை இன்று மும்பை,ஹைதராபாத்திலிருந்து 2 விமானங்களில் சென்னைக்கு அனுப்பிவைத்துள்ளது.

அதன்படி மும்பையிலிருந்து இன்று மாலை சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் 5 லட்சத்து 89 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் 50 பாா்சல்களில் வந்தன. அதைப்போல் ஹைதராபாத்திலிருந்து இன்று மாலை சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 530 டோஸ் கோவாக்சீன் தடுப்பூசி மருந்துகள் 37 பாா்சல்களில் வந்தன.இன்று ஒரே நாளில் மொத்தம் 7 லட்சத்து 55 ஆயிரத்து 530 டோஸ் தடுப்பூசி மருந்துகளை மத்திய அரசு தமிழகத்திற்கு அனுப்பிவைத்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறையினா் சென்னை விமானநிலையத்தில் இந்த தடுப்பூசி மருந்துகளை பெற்றுக்கொண்டு,குளிா்சாதன வாகனங்கள் மூலம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகத்தில் உள்ள மருத்துவ கிடங்கிற்கு எடுத்து சென்றனா்.

Tags : Tamil Nadu ,Mumbai ,Itaraba , Another 7.55 lakh vaccines arrived in Tamil Nadu on flights from Mumbai and Hyderabad to Chennai
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...