மாஜி அதிமுக எம்எல்ஏ திமுகவில் இணைந்தார்

கரூர்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 2016 முதல் 2021 வரை அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர் கீதா மணிவண்ணன். நடந்து முடிந்த 2021ம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில் இவரது பெயர் இடம் பெறவில்லை. பின்னர் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து விரைவில் நல்ல முடிவு எடுப்பேன் என கூறினார். இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில் சென்னை சென்று அங்கு அண்ணா அறிவாலயத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பூங்கொத்து கொடுத்து திமுகவில் இணைந்தார்.

இதுபற்றி கீதா மணிவண்ணன் தரப்பில் கூறியதாவது: நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. தற்போது அதிமுகவில் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு இரண்டு கோஷ்டிகளுக்கிடையே தீவிர போட்டி நிலவி வருகிறது அவர்களுக்குள் ஒருங்கிணைந்த தலைமை இல்லை. அதே நேரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுள்ளதால் தமிழகத்திற்கு நல்லாட்சி ஆரம்பமாகியுள்ளது. இதனால், திமுகவில் இணைந்துள்ளேன் என்றார்.

Related Stories: