மிசோரம் மாநிலத்தின் லுங்க்லே பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.7-ஆக பதிவு

மிசோரம்: மிசோரம் மாநிலத்தின் லுங்க்லே பகுதியில் இன்று காலை 9.03 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 3.7-அக பதிவாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் குறித்த சேதம் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கமானது இன்று காலை 09.03 மணியளவில் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இதனால், அங்குள்ள மக்கள் அச்சம் அடைந்த நிலையில், இன்று மிசோரம் மாநிலத்திலும் லேசான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது மக்களுக்கு சற்று அச்சத்தை அளித்துள்ளது. நிலநடுக்கம் குறித்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடவில்லை என அம்மாநில அரசு கூறியுள்ளது. 

Related Stories:

>