மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது முதல் அமைச்சரவை கூட்டம்: முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்

சென்னை: சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று காலை 11.30 மணியளவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. கடந்த 3-ம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலினும், அமைச்சர்கள் 32 பேரும் பதவி ஏற்றனர். எனேவ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் இதுவாகும். இந்த புதிய ஆட்சி தொடங்கிய 3-ம் நாளான இன்று அவசரமாக அமைச்சரவை கூட்டப்படுகிறது. தற்போது கொரோனா 2-ம் அலை மிக வேகமாக பரவி வருகிறது. 

இந்நிலையில் இதை குறைக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் 10-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொடர்பாக ஆலோசனை நடத்த இன்று முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. கொரோனா உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தகவல்  கூறப்படுகிறது.

Related Stories:

>