பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் நீக்கம்

சென்னை: பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்ட அறிக்கை: பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் புழல் ஏ.தர்மராஜ் கட்சியின் கொள்கைக்கு எதிராகவும் கட்சி கட்டுப்பாட்டை மீறியும்  சமூக வலைதளங்களில் கட்சியின் கொள்கை மற்றும் நிர்வாகிகள் பற்றி தவறான தகவல்களைபரப்பி வருவதால் அவர், கட்சியின் மாநில பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இன்று முதல் நீக்கப்படுகிறார்.

மேலும் கட்சியின் புதிய மாநில பொருளாளராக திருச்சி துறையூரை சேர்ந்த பெ.பிரபாகரன் நியமிக்கப்படுகிறார். அவருக்கு கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு  கூறியுள்ளார்.

Related Stories:

>