×

சொந்த ஊர் செல்வோரின் வசதிக்காக முக்கிய மாநகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்: அரசு போக்குவரத்துக்கழகம் தகவல்

சென்னை: சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக, அரசு போக்குவரத்துக்கழங்களின் சார்பில் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கொரோனா நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழக முதலமைச்சர் நாளை (10-5-2021) காலை 4 மணி முதல் (24-5-2021) காலை 4 மணி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு  அமல்படுத்தப்படுத்தி உத்திரவிட்டுள்ளார்.

அதனை முன்னிட்டு நேற்றும், இன்றும் (9/5/21) பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிவுறுத்தலின்படி  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில்  சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கும், மாநிலத்தில் முக்கிய நகரங்களான கோவை, திருப்பூர், சேலம், திருச்சி, மதுரை மற்றும் முக்கிய நகரங்களுக்கு இடையே தொடர்ந்து பேருந்து வசதியை போக்குவரத்துத் துறை சார்பில் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.

சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்கின்ற பொதுமக்கள், கடைசி நேர கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, இணையதள வசதியான www.tnstc.in மற்றும் tnstc official app ஆகியவற்றின் மூலமாக முன்பதிவு செய்து  கொள்ளலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களுக்கு பாயின்ட் டூ பாயின்ட் பஸ்

தனியார் நிறுவனங்களில்  பணிபுரியும் தொழிலாளர்களை பணிசெய்யும் இடத்திலிருந்து தங்கள் வீடுகளுக்கு  செல்வதற்கு பாயின்ட் டூ பாயின்ட் பேருந்துகள் தேவைப்பட்டால், மாநகர்  போக்குவரத்துக் கழகம், சென்னை 94450-30523;  அரசு விரைவுப் போக்குவரத்துக்  கழகம், சென்னை 94450-14416; தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்,  விழுப்புரம் 94450-21206; தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்,  கோயம்புத்தூர் 94422-68635; தமிழ்நாடு அரசு  போக்குவரத்துக் கழகம்,  கும்பகோணம்    94879-95529    என்ற கைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பதிவு செய்து  பயன் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Tags : Government Transport Corporation , Operation of special buses to major cities for the convenience of home commuters: Government Transport Corporation Information
× RELATED டிப்போவில் ஓய்வெடுத்தவரிடம் செல்போன் திருடிய பஸ் டிரைவர்