ஊரடங்கின்போது தடையற்ற மின்சாரம்: அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தல்

சென்னை: ‘ஊரடங்கின் போது தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும்’ என, ஊழியர்களுக்கு மின்வாரிய துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தியுள்ளார். சென்னை, தலைமை செயலகத்தில் மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அலுவலகத்தில் நேற்று ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாளை முதல் (10-5-21) வரும் 24ம் தேதி வரை அமல்படுத்தப்படவுள்ள ஊரடங்கின் போது தமிழகம் முழுவதும் தடையின்றி மின்சாரம் வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை வகித்தார்.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் பங்கஜ் குமார் பன்சல், இணை மேலாண்மை இயக்குநர் வினீத், மின் தொடரமைப்பு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் சண்முகம், நிதி இயக்குநர்கள், தொழில்நுட்ப இயக்குநர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஆலோசனைக்கூட்டத்தின் போது மின்வாரிய அமைச்சர் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாளை முதல் (10-5-21) வரும் 24ம் தேதி வரை அமல்படுத்தப்படவுள்ள ஊரடங்கின் போது தமிழகம் முழுவதும் தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும். ஊழியர்கள் பணியாற்றும் போது அரசு விதித்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பாதுகாப்பாக பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்’ என்றார். 

Related Stories:

More
>