மருத்துவமனையில் அனுமதிக்க பாசிடிவ் ரிப்போர்ட் கட்டாயம் இல்லை: மத்திய அரசு புதிய உத்தரவு

புதுடெல்லி: மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற கொரோனா பாசிடிவ் ரிப்போர்ட் கட்டாயம் இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது. கொரோனா நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதிப்பது தொடர்பாக திருத்தப்பட்ட தேசிய கொள்கையை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

* கொரோனா சுகாதார மையங்களில் சிகிச்சை பெற பாசிட்டிவ் ரிப்போர் தர வேண்டிய கட்டாயம் இல்லை. அறிகுறி இருப்பவர்கள் எந்த மருத்துவமனையிலும் சேர்ந்து சிகிச்சை பெறலாம்.

* எந்த சமயத்திலும் சேவை மறுக்கப்படக் கூடாது. வேறு நகரத்தை சேர்ந்த நோயாளி என்றாலும் கூட ஆக்சிஜன், அத்தியாவசிய மருந்துகள் வழங்கப்பட வேண்டும்.

* முறையான ஆவணம் இல்லை என யாரையும் மருத்துவமனையில் அனுமதிக்காமல் இருக்க கூடாது.

* தேவைப்படுவோரை மட்டும் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும்.

* ஆக்சிஜன் உதவியுடன் 9 லட்சம் நோயாளிகள்

கொரோனா சூழல் குறித்து மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன், பிற துறை மத்திய அமைச்சர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இதில் அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறுகையில், ‘‘நாடு முழுவதும் 4 லட்சத்து 88 ஆயிதர்து 861 நோயாளிகள் ஐசியுவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1 லட்சத்து 70 ஆயிரத்து 841 பேர் வென்டிலேட்டர் உதவியுடனும், 9 லட்சத்து 2 ஆயிரத்து 291 பேர் ஆக்சிஜன் உதவியுடனும் சிகிச்சை பெறுகின்றனர். கடந்த ஒரு வாரமாக 180 மாவட்டங்களில் புதிதாக கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை’’ என்றார்.

Related Stories:

>