தடுப்பூசிக்கு 4 இலக்கு எண்

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புவோர், அதற்கான ‘கோ-வின்’ இணையதளத்தில் முன்பதிவு செய்யவேண்டும். ஆனால் முன்பதிவு செய்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் தடுப்பூசி போடச் செல்லாதவர்களுக்கும், அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதாக குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) வருகிறது. இந்த தவறை சரி செய்ய ‘கோ-வின்’ செயலியில் 4 இலக்க பாதுகாப்பு எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசிக்காக முன்பதிவு செய்வோருக்கு அந்த 4 இலக்க எண் வழங்கப்படும். பின்னர் அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்போது, 4 இலக்க எண் கேட்கப்படும். அது, கோ-வின் இணையதளத்திலும் பதிவு செய்யப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>