×

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஹாக்கி வீரர் ரவீந்திர பால் மரணம்

லக்னோ: ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஹாக்கி வீரர் ரவீந்திர பால் சிங் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இந்திய ஹாக்கி அணி கடைசியாக 1980ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில்தான் தங்கம் வென்றது. அந்த அணியில் விளையாடியவர் உத்ரபிரதேசத்தை சேர்த் ரவீந்தர பால் சிங்(62). லக்னோவில் வசித்து வந்த அவர் கொரோனா தொற்று காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் ஏப்.24ம் தேதி சேர்ந்தார். தனியார் மருத்துவமனையில் செலவுகளை சமாளிக்க முடியால் கஷ்டப்பட்ட ரவீந்திராவுக்கு பல்வேறு தரப்பினர் உதவினர். கூடவே ஹாக்கி இந்தியா இன்று 10 லட்ச ரூபாய் தர இருந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் நேற்றுக் காலை உயிரிழந்தார். அவர் 1979ல் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி, 1982ல் ஆசிய, உலக கோப்பைகள், 1984ல் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகள் என இந்தியாவுக்காக பல ஆட்டங்களில் விளையாடி பெருமை சேர்த்துள்ளார். ரவீந்திரா மறைவுக்கு சென்னை மாவட்ட ஹாக்கி சங்க நிர்வாகிகள், மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியின் கேப்டனாக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த வா.பாஸ்கரன் உட்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்.

Tags : Ravindra Paul , Olympic gold medalist hockey player Ravindra Paul dies
× RELATED ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஹாக்கி வீரர் ரவீந்திர பால் மரணம்