இங்கிலாந்து செல்லும் இந்திய அணி திடீர் அறிவிப்புக்கு காரணங்கள் என்ன?

மும்பை: இந்தியா-நியூசிலாந்து இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் ஜூன் 18ம் தேதி தொடங்குகிறது. போட்டிக்கு இன்னும் 40 நாட்கள் இருக்கும் நிலையில் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. முதல்முறையாக இப்படி விரைவாக வீரர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதற்கு முக்கிய காரணம் கொரோனா பரவல்தான். இந்தியாவில் இருந்து விமானங்கள் வர வெளிநாடுகள் தடை விதித்துள்ளது. அனுமதிக்கும் நாடுகளும் கடுமையாக விதிமுறைகளை கடைபிடிக்கின்றன. அவற்றை எதிர்கொள்ள வசதியாகதான் இந்திய அணி சீக்கிரமாக அறிவிக்கப்பட்டது. கூடவே ஐபிஎல் தொடரில் உயிர் பாதுகாப்பு  குமிழியான பயோ பபுளில் ஏற்பட்ட ஓட்டையால் வீரர்கள் பலருக்கு தொற்று ஏற்பட்டது. அதனால் தொடரையே ஒத்தி வைக்கும் நிலை ஏற்பட்டது.

எனவேதான் அணியை விரைவாக அறிவித்த பிசிசிஐ, கூடவே இங்கிலாந்து பயணத்துக்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்த உள்ளது. இங்கிலாந்து செல்லும் வீரர்களை இந்தியாவில் குறைந்தது 8நாட்கள், இங்கிலாந்தில் 10 நாட்கள் என 18 நாட்கள் குவரான்டைனில் வைக்க உள்ளனர். இந்தியாவில் 2 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்ய உள்ளனர். இந்தியாவில் மே 25ம் தேதிக்குள் குவாரன்டைன் தொடங்கப்படும். பயோ பபுளில் வைக்கப்படும் வீரர்கள் ஜூன் 2ம் தேதி வாக்கில் இங்கிலாந்து புறப்பட உள்ளனர். அங்கு ஜூன் 12 அல்லது 13ம் தேதி வரை குவாரன்டைனில் இருக்கும் இந்திய வீரர்கள் பயோ பபுள் கண்காணிப்பில் பயிற்சியை தொடங்குவார்கள்.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஜூன் 22ம் தேதி முடிகிறது. அதன்பிறகும் பயோ பபுள் என்ற உயிர் பாதுகாப்பு குமிழியில் வீரர்கள் இருக்க வேண்டும். காரணம் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட்களை கொண்ட போட்டித் தொடர் ஆக.4ம் தேதி தொடங்கி செப்.14ம் தேதி வரை நடக்கிறது. எனவே இங்கிலாந்து செல்லும் வீரர்கள் கிட்டதட்ட 4 மாதங்கள் பயோ பபுள் கண்காணிப்பில் இருக்க வேண்டும். அதனால்தான் வீரர்கள் குடும்பத்தினரை உடன் அழைத்து வரலாம் என்று பிசிசிஐ அனுமதித்துள்ளது. ஆனால் அவர்களும் வீரர்களை போல் பயோ பபுள் கண்காணிப்பில் இருக்க வேண்டும். முக்கியமாக இந்திய குவாரன்டைனுக்கு முன்னதாக வீரர்கள், அவர்கள் குடும்பத்தினர்  தடுப்பூசி போடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>