அபித் அலி இரட்டைச்சதம்; பாக். ரன் குவிப்பு

ஹராரே: ஜிம்பாப்வே-பாகிஸ்தான் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் ஹராரேவில் தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 90 ஓவருக்கு 4 விக்கெட் இழப்புக்கு 268 ரன் குவித்தது. அந்த அணியின் அசார் அலி 126ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து 2வது நாளான நேற்று 2வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடிய பாக் அணியின் அபித் அலி இரட்டைச் சதம் விளாசினார். பின்னர் 147.1 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 510 ரன் எடுத்த பாக். டிக்ளேர் செய்தது அந்த அணியின் அபித் அலி 215* ரன்னுடன் களத்தில் இருந்தார். இவர், நவுமன் அலி(97ரன்) உடன் இணைந்து 8வது விக்கெட்டுக்கு 169 ரன் சேர்த்தார். ஜிம்பாப்வேவின் பிளெஸ்ஸிங் 3, சிசோரோ 2, ரிச்சர்டு, லூக், டொனால்டு ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார். அதனையடுத்து ஜிம்பாப்வே முதல் இன்னிங்சை தொடர்ந்து விளையாடி வருகிறது.

Related Stories:

More
>