டிரம்ப், அமிதாப் பெயரில் போலி ‘இ-பாஸ்’ வழங்கல்..! இமாச்சல் போலீசார் வழக்குபதிவு

சிம்லா: அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஆகிய இருவர் பெயரிலும், போலி இ-பாஸ் பெற்ற விவகாரத்தில் போலீசார் சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். கொேரானா இரண்டம் அலை வேகமெடுத்துள்ளதால், இமாச்சல பிரதேச மாநிலத்திற்குள் நுழைவதற்கு ‘இ-பாஸ்’ கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா நெகடிவ் சான்று பெற்ற வெளிமாநிலத்தவர்களுக்கு மட்டுமே ‘இ-பாஸ்’ வழங்கப்படுகிறது. அவ்வாறு வெளிமாநிலத்தில் இருந்து வருவோர், 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்ற நடைமுறை அமலில் உள்ளது. இந்நிலையில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோரின் பெயர்களில், இரண்டு இ-பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதுெதாடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. இதுகுறித்து இமாச்சல பிரதேச தகவல் தொழில்நுட்பத் துறை அளித்த புகாரின்  அடிப்படையில், சிம்லா கிழக்கு காவல் நிலைய போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு  செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஆகிய இருவர் பெயரிலும் இரண்டு இ-பாஸ்கள் பெறப்பட்டுள்ளன. அவை, ஒரே மொபைல் எண் மற்றும் ஆதார் எண் மூலம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. ஹெச்பி -2563825 மற்றும் ஹெச்பி -2563287 ஆகிய இரண்டு இ-பாஸ்கள் பெறப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்’ என்றனர்.

Related Stories:

>