×

மதுரையில் இன்று முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கியது

மதுரை: மதுரையில் இன்று முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கியுள்ளது. சென்னையை தொடர்ந்து மதுரையில் இன்று முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனையானது துவங்கியுள்ளது. மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இந்த ரெம்டெசிவிர் மருந்து விற்பனையானது தொடங்கியுள்ளது. 500 குப்பிகள் இன்று விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு அதிகபட்சம் 6 குப்பிகள் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

83 நபர்களுக்கு வழங்குவதற்கான ரெம்டெசிவிர் மருந்து இன்று தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஒரு குப்பி 1568 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மருத்துவர் பரிந்துரை கடிதம், நோயாளிகள் மற்றும் மருந்து வாங்க வருபவர்களின் ஆதார் அட்டை நகலை கொண்டுவர வேண்டும். மதுரையில் இன்று முதல் ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்படும் என்று மக்களுக்கு தெரியாத நிலையில் மக்களின் வரவு என்பது குறைந்த அளவே காணப்படுகிறது. பொதுமக்களின் எண்ணிக்கையானது குறைந்த அளவிலேயே வந்துள்ளனர். இன்று முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கியுள்ள நிலையில் நாளை முதல் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் தட்டுப்பாடு இல்லாமல் மருந்து கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததையொட்டி மேலும் 5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை, நெல்லை, திருச்சி, கோவை, சேலத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



Tags : Maduro , remdesivir
× RELATED பெண் போலீசிடம் தகராறு செய்ததாக வழக்கு:...