தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கது : நடிகர் சித்தார்த் ட்வீட்

சென்னை : தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர வரும் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப் படுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அறிவித்தார். ஊரடங்கின் போது தேநீர் கடைகள், மளிகை கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்டவை பகல் 12 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்படுவதாகவும் சலூன் கடைகள் திறக்கப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்து, கார்கள், ஆட்டோக்கள் ஓடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கது என நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், நாம் பெரும் ஆபத்தில் இருக்கிறோம். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை இழந்து வருகிறோம். மருத்துவர்களுக்கு ஆதரவு வழங்குவோம். பாதுகாப்பாக இருப்பதும் மற்றவர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதும் நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது. நம் ஒன்றாக இந்த பெரும் தொற்றை சமாளிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>