மத்திய சென்னை மேற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் அதிரடி நீக்கம்

சென்னை:  தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய சென்னை மேற்கு மாவட்ட தேமுதிக செயலாளராக செயல்பட்டு வந்த பாலசுப்ரமணியன், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சியின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதால், அவர் பதவி மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுகிறார்.   இவருடன் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என யாரும் எந்தவிதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது. மத்திய சென்னை மேற்கு மாவட்ட தேமுதிக பொறுப்பாளராக பிரபாகரன் நியமிக்கப்படுகிறார். இவருக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு தந்து கட்சி வளர்ச்சி பெற ஒத்துழைப்பு கொடுக்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

More
>