5 கோப்புகளில் முதல்வர் கையெழுத்து மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் நல்ல தொடக்கம்: இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் வரவேற்பு

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்  வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை பொறுப்பேற்றதும், அலுவலகம் சென்ற முதலமைச்சர் கொரோனா நோய்த் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் சூழலில், மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டு உடனடியாக குடும்பத்திற்கு தலா ரூ.2000  ரொக்கப் பண உதவி செய்வது, ஆவின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு ₹3 குறைப்பது உள்ளிட்ட ஐந்து கோப்புகளில் முதல் நாளில் முதலமைச்சர் கையெழுத்திட்டிருப்பது மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் நல்ல தொடக்கமாகும். நோய்த் தொற்று பரவும் சூழலில் பரிதவித்து நிற்கும் சாதாரண மக்களுக்கு நம்பிக்கையூட்டி ஆற்றுப்படுத்தும் முதலமைச்சரின் நடவடிக்கையை வரவேற்று, நன்றி பாராட்டுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More