திண்டுக்கல்லில் 40 ஆண்டுகளாக தங்கியிருந்த சித்தருக்கு கண்ணீருடன் பக்தர்கள் பிரியாவிடை: உடல் நலமின்றி சொந்த ஊர் திரும்பினார்

திண்டுக்கல்: திருவண்ணாமலை மாவட்டம், களம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியநாதன் (68). மனைவி பிரபாவதி. 5 மகள்கள், அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது. பாக்கியநாதன் ஊட்டியில் உள்ள வெலிங்டன் ராணுவ முகாமில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் வந்த இவர், ஜடாமுடியுடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் சித்தராக வலம் வந்தார். இந்நிலையில் திண்டுக்கல் மெயின் ரோட்டில் உள்ள வெள்ளை விநாயகர் கோயில் அருகே, கடந்த 2 நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட பாக்கியநாதன் எழுந்திருக்க முடியாமல் படுத்தபடியே கிடந்தார்.

தகவலறிந்து இவரது மனைவி மற்றும் மகள்கள், இவரை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல திண்டுக்கல் வந்தனர். ஆனால் அவரை அழைத்துச் செல்லக்கூடாது என கூறி பக்தர்கள், குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பிரபாவதி, திண்டுக்கல் வடக்கு போலீசாரிடம் புகார் அளித்தார். ேபாலீசார், பக்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பாக்கியநாதனை, அவர் மனைவி, மகள்களுடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். சித்தர் சென்றவுடன், அவரது பக்தர்கள் கண்ணீர் விட்டு அழுதது, அங்கிருந்தவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

Related Stories:

>