×

தஞ்சை அரசு மருத்துவமனையில் கொரோனாவால் இறந்தவரின் சடலம் மாறியதாக பரபரப்பு: ஆய்வுக்குப்பின் மீண்டும் ஒப்படைப்பு

தஞ்சை: தஞ்சாவூர் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் இறந்தவரின் சடலம் மாறிவிட்டதாக கூறி உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள கீழப்பாளையம் கிராமத்தை சேர்ந்த 46 வயதான ஆண் ஒருவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து, இவரது உடல் சவக்கிடங்குக்கு எடுத்து செல்லப்பட்டு, கொரோனா விதிமுறைப்படி பிளாஸ்டிக் உறையால் மூடப்பட்டது. இதையடுத்து இவரது உடலை உறவினர்கள் வாங்கி சென்றனர்.

ஊருக்கு சென்ற பின்னர்தான் இறந்தவர் 55 வயது மதிக்கத்தக்கவராக இருந்ததாலும், வேறொருவரின் சடலம் என்ற சந்தேகம் உறவினர்கள் மத்தியில் ஏற்பட்டது. அவரது மகனும், தனது தந்தையின் உடல் இல்லை எனக்கூறினார்.
இதையடுத்து, இச்சடலத்தை உறவினர்கள் மீண்டும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேற்றுமுன்தினம் இரவு கொண்டு வந்தனர். இதுதொடர்பாக மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அலுவலர்கள்  சம்பந்தப்பட்டவருடைய உடல் தானா அல்லது வேறு ஒருவரின் உடலை மாற்றி கொண்டு செல்லப்பட்டதா என விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து கீழப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் உடல்தான் என உறுதி செய்யப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags : Corona ,Tanjore ,Government ,Hospital , Sensation that the corpse of the deceased by Corona was changed at Tanjore Government Hospital: Handing back after examination
× RELATED தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் 2வது நாளாக வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை