திருமணத்தில் மும்பை ஜோடி புதுமை மாப்பிள்ளைக்கு தாலி கட்டிய இளம்பெண்: வலைதளத்தில் அள்ளிய ‘லைக்’குகள்

மும்பை: மாப்பிள்ளைக்கு தாலி கட்டி இளம்பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு கொேராேனா ஊரடங்கு தொடங்கிய பிறகு, திருமணங்கள் பல வித்தியாசமான முறையில் நடந்துவருகின்றன. வீடியோவில் திருமணம், வாட்ஸ் ஆப்பில் வாழ்த்து, மொபைல் ஆப்ஸ் மூலம் மொய் எழுதுவது என பல புதுமைகளை கொரோனா காலம் உருவாக்கியுள்ளது. இப்படித்தான், ஆணுக்கு பெண் தாலிகட்டிய சம்பவமும் நடந்துள்ளது.  கடந்த ஆண்டு டிசம்பரில் கொரோனா தொற்றுக்கு இடையே மும்பை ஜோடிக்கு நடைபெற்ற திருமணத்தில் புதுமை ஒன்றை நிகழ்த்தியுள்ளது. சர்துல் கதம் என்ற இளைஞருக்கும், தனுஜா என்ற இளம்பெண்ணுக்கும் நடைபெற்ற திருமணத்தில் மணப்பெண் இளைஞர் கழுத்தில் தாலி கட்டினார்.

தொடர்ந்து மாப்பிள்ளையும் பெண்ணுக்கு தாலி கட்டினார். இந்த காதல் கதையின் பின்னணி இதோ:  கல்லூரியில் படித்த சர்துலும் தனுஜாவும் காதல் வயப்பட்டனர். ஆனால், இருவருமே தங்கள் காதலை வெளிப்படுத்தவில்லை. 4 ஆண்டு படிப்பு முடிந்த பின்னர் தான் அவர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தியுள்ளனர். அப்போது ஒருமுறை டீக்குடித்தபடி சந்தித்து பேசிய சர்துல் ெபண்ணியம் பற்றி பேசினார். அப்போது சர்துல் தான் ஒரு பெண்ணியவாதி என தனுஜாவிடம் தெரிவித்தார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அப்போது சர்துல் தனுஜாவிடம் ஏன் பெண் மட்டும் தான் தாலி கட்டிக்கொள்ளவேண்டுமா? ஆண் கட்டிக்கொள்ளக்கூடாதா என கேள்வி எழுப்பினர். அப்போது தான் திருமணத்தின் போது நான் தாலி கட்டிக்கொள்வேன் என உறுதி எடுத்தார் சர்துல். மேலும் நான் தனுஜா கழுத்திலும், அவர் என் கழுத்திலும் தாலி கட்டிக்கொண்டால் மகிழ்ச்சியடைவேன் என பேட்டி அளித்தார்.

அதே போல் நடந்த திருமணத்தில் இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் தாலி கட்டிக்கொண்டனர். இந்த தம்பதியின் புதிய முயற்சிக்கு 94,000 லைக்குகள் இன்ஸ்டாகிராமில் கிடைத்துள்ளன. பேஸ்புக்கிலும் 7400 பேர் லைக் தெரிவித்துள்ளனர். இவர்களது புதிய முயற்சியை வரவேற்றுள்ள நெட்டிசன்கள் சிலர் சர்துலிடம் ``நீங்கள் சேலையும் கட்டிக்கொள்வீர்களா?’’ ``இது பாலின சமத்துவத்துக்கு ஆதரவளிக்கும் முறையல்ல’’ எனவும் சரமாரியாக தாக்குதல்களை தொடுத்துள்ளனர். ஆனால் இது பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் சர்துல் கடந்த 4 மாதங்களாக சிறப்பான இல்லறத்தை நடத்தி வருகிறார். சர்துல் கூறுகையில், ``தனுஜாவுடனான எனது உறவு சிறப்பானது. எங்கள் பணியில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்கிறோம். எங்கள் கனவில் நம்பிக்கை கொண்டு வாழ்வில் இணைந்து செயல்படுகிறோம். உலகம் என்ன நினைக்கிறது என்பது பற்றி எங்களுக்கு கவலையில்லை’’ என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>