டெஸ்ட் உலககோப்பை பைனல் இந்திய அணி அறிவிப்பு

மும்பை: இங்கிலாந்தில் நடைபெற பெற உள்ள முதல்  ஐசிசி டெஸ்ட் உலக கோப்பை இறுதிப்போட்டியில் விளையாட உள்ள  இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக ஒருநாள், டி20 கிரிக்கெட் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது ேபால் முதல்முறையாக டெஸ்ட் போட்டிக்கும் உலக கோப்பை போட்டி நடக்கிறது. ஐசிசி உலக கோப்பை ெடஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற பெயரில் நடைபெறும் இந்த உலக கோப்பைத் தொடர் 2019ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது. கடைசிப் போட்டி சில நாட்களுக்கு முன்பு இலங்கையில் முடிந்தது. ஆனாலும் இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முடிந்த போதே,  புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா,  நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்று விட்டன.

இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்ஹாம்டன் அரங்கில் ஜூன் 18ம் தேதி தொடங்குகிறது. அந்தப்போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணிக்கான வீரர்களின் பட்டியலை பிசிசிஐ நேற்று அறிவித்தது. அதன்படி கேப்டன் கோஹ்லி தலைமையிலான  அணியில் ரகானே(துணை கேப்டன்), ரோகித், கில், மயாங்க்,  புஜாரா,  விகாரி, ரிஷப்(விக்கெட் கீப்பர்), ஆர்.அஷ்வின், ஜடேஜா, அக்சர் , வாஷிங்டன், பும்ரா, இஷாந்த், ஷர்துல், உமேஷ்  ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். காயமடைந்துள்ள  ராகுல், விருத்திமான்  இருவரும் உடல் தகுதி ெபறுவதை பொறுத்து அணியில் இடம் பிடிப்பார்கள். இவர்களை தவிர அபிமன்யூ ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான், அர்ஜன் நாகவாஸ்வாலா ஆகியோர் பதிலி ஆட்டக்காரர்களாக இங்கிலாந்து செல்வார்கள். உலக கோப்பைக்கு பிறகு நடைபெற உள்ள இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இதே அணி விளையாடும்.

Related Stories:

>