×

மேற்கு வங்க வன்முறை தொடர்பாக மத்திய குழு நேரில் விசாரணை

கொல்கத்தா: சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதும் மேற்கு வங்க வன்முறை தலைவிரித்தாடியது. இந்த சம்பவங்களில் 16 பேர் கொல்லப்பட்டனர். இதுகுறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள, மத்திய உள்துறை அமைச்சகம் 4 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இந்த மத்திய அரசு குழு நேற்று முன்தினம் மேற்கு வங்கம் வந்தடைந்தது.வன்முறை சம்பவங்கள் நடந்த தெற்கு 24 பர்கானஸ் மற்றும் வடக்கு 24 பர்கானஸ் மாவட்டங்களில் நேரில் ஆய்வை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தார் மற்றும் உள்ளூர் மக்களிடமும் அவர்கள் விசாரணை நடத்தினர்.


Tags : West Bengal , Central Committee in person inquiry into West Bengal violence
× RELATED சிபிஐ விசாரணை: கொல்கத்தா உயர்நீதிமன்ற...