கொரோனா தாக்கத்தை தணிக்க அரசுடன் இணைந்து பணியாற்றுவோம்: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் உறுதி

சென்னை: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க தலைவர் குமரேசன், பொதுச்செயலாளர் முருகையன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றுள்ள  மு.க.ஸ்டாலின், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோருக்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிக்கிறோம். தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றிற்கு எதிரான போரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள போதும், தற்போது இரண்டாம் அலை தாக்கத்தை தணித்திட ஒட்டு மொத்த வருவாய்த்துறை அலுவலர்களும் அரசுடன் இணைந்து மக்கள் பணியாற்றி வருகின்றனர் என்பதையும், தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்கள் உறுதி பூண்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>