தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது நல்ல தொடக்கம்: முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் பாராட்டு

சென்னை: தேர்தல் வாக் குறுதிகளை நிறைவேற்றுவது நல்ல தொடக்கம் என முதல்வர் மு.க.ஸ்டாலி னுக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பாராட்டு தெரி வித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றவுடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணம், ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு , பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட ஐந்து முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார்.இது ஒரு நல்ல தொடக்கமாகும். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வரவேற்பதுடன், தனது பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

அதிமுக, பாஜ ஆட்சிகளின் தவறான நடவடிக்கைகளின் விளைவாக கொரோனா நோய் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடியில் தமிழகம் தத்தளிக்கிறது. கொரோனா தொற்று தீவிரமாகி மரணங்கள் அதிகரித்துக் கொண்டுள்ளன. போர்க்கால அடிப்படையில் கொரோனா தொற்றை எதிர்த்த போராட்டத்தை மக்கள் இயக்கமாக நடத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற வேண்டுமென வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Related Stories:

>