தமிழகத்தில் கூடுதல் கட்டப்பாடுகளுடன் முழு ஊரடங்கா? மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்

சென்னை: தமிழகத்தில் கூடுதல் கட்டப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்த அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஊரடங்கில் மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க ஆட்சியர்கள் கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் 2 வாரங்களுக்கு  மிகக் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு குறித்த அறிவிப்பு இன்று இரவு நாளை காலை வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அறிவித்து வருகிறது. 

தற்போது இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகள் வைக்கவும் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் மே 6 முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களான பால், மருந்தகம், பெட்ரோல் நிலையங்கள், அவசர ஊர்தி மட்டும் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருந்ந போதிலும் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. அதனால் தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அமல்ப்படுத்தப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

Related Stories:

>