×

கோவிஷீல்டு, கோவாக்சின் பயன்பாட்டில் உள்ள நிலையில் மேலும் 1.5 லட்சம் ஸ்புட்னிக் - 5 இந்தியா வருகை

டெல்லி: இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில் மேலும் 1.5 லட்சம் ஸ்புட்னிக் - 5 தடுப்பூசிகள் இந்தியாவுக்கு அனுப்பப்பட உள்ளதாக ரஷ்ய நேரடி முதலீட்டு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிகத் தீவிரமாக உள்ள நிலையில், கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகின்றன. அதேநேரம், ரஷ்யாவில் உற்பத்திசெய்யப்படும் ஸ்புட்னிக் - 5 தடுப்பூசிகளை இந்தியாவுக்கு அனுப்ப ரஷ்யா முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே முதல் தொகுப்பாக 1,50,000 ஸ்புட்னிக் - 5 தடுப்பூசிகள் மே 1ம் தேதி இந்தியாவுக்கு அனுப்பியது. 


தற்போது இரண்டாம் தொகுப்பாக 1,50,000 தடுப்பூசிகளை அனுப்ப உள்ளதாகவும், அடுத்த சில தினங்களில் அந்த தடுப்பூசிகள் இந்தியா வந்து சேரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக ரஷ்ய நேரடி முதலீட்டு நிதி அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், ‘மே மாத இறுதியில் டாக்டர் ரெட்டீஸ் நிறுவனத்துடனான கூட்டு ஒப்பந்தத்தில் 3 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை அனுப்ப உள்ேளாம். ஜூன் மாதத்தில் 5 மில்லியன், ஜூலை மாதத்தில் 10 மில்லியன் டோஸ் ஸ்புட்னிக் - 5 தடுப்பூசிகள் இந்தியாவுக்கு வழங்கப்படும். தடுப்பூசிகள் மட்டுமல்லாமல் 4 ஆக்சிஜன் உற்பத்தி டிரக்குகள் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட உள்ளது. 


அதேநேரம், ரஷ்யா ஸ்புட்னிக் - 5 தடுப்பூசி சோதனை வெற்றிகரமாக இருப்பதால், உலகெங்கிலும் உள்ள பல நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி 79.4 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும். இந்த தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக ஒற்றை டோஸ் தடுப்பூசி பரிசோதிக்கப்பட்டது. தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகள் நடந்து வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ரஷ்யா மற்றும் கானாவில் 7,000 பேருக்கு மூன்றாம் கட்ட பரிசோதனை நடக்கிறது. ரஷ்யா இதுவரை 8 மில்லியன் மக்களுக்கு ஸ்புட்னிக் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை போட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Sputnik ,India ,Govshield ,Kovacs , Cow Shield, Kovacsin, 1.5 Lakhs, Sputnik - 5 India
× RELATED கொரோனா தடுப்பூசி சீரம் நிறுவனம் ரூ.52கோடி நன்கொடை..!!