முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின்!: தமிழகமே விழாக்கோலம்..பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மக்கள் உற்சாக கொண்டாட்டம்..!!

திருவாரூர்: தமிழக முதலமைச்சராக மு.க ஸ்டாலின் பதவியேற்றதை மாநிலம் முழுவதும் திமுக தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்ற்னர். திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில், திமுக நகர செயலாளர் பிரகாஷ் தலைமையில், ஏராளமானோர் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். தமிழக முதலமைச்சராக மு.க ஸ்டாலின் பதவியேற்றதை தொடர்ந்து திமுகவினர் மதுரையில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். 

கோவை மாவட்டம் பேரூர் பகுதியில் திமுகவினர் ஊர்வலமாக சென்று அந்த பகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டாடி மகிழ்ந்தனர். சேலம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த திமுகவினர் 500 ஏழை, எளிய மக்களுக்கு புத்தாடைகளை வழங்கினர். ஈரோட்டில் திமுக வழக்கறிஞர் அணியினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கொரோனா விதிகளை பின்பற்ற வலியுறுத்தி பொதுமக்களுக்கு முகக்கவசங்களையும் அவர்கள் வழங்கினர். 

முன்னாள் முதலமைச்சர் பழனிசாமியின் சொந்த ஊரான எடப்பாடியில் பேருந்து நிறுத்தம் அருகே திமுகவினர் சமூக இடைவெளியை பின்பற்றி மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். நத்தம், திண்டுக்கல், திருவண்ணாமலை, பரமத்திவேலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் திமுக நிர்வாகிகளின் தொண்டர்கள் மு.க. ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் தருணத்தை உற்சாகம் பொங்க கொண்டாடி வருகின்றனர். 

Related Stories:

>