தேர்தல் வாக்குறுதிகளை முதல் நாளிலிருந்து நிறைவேற்ற ஆரம்பித்து விட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் : அமைச்சர் துரைமுருகன்

சென்னை : மு.க.ஸ்டாலினின் அமைச்சரவையில் அனுபவமிக்கவர்களுக்கும், இளைஞர்களுக்கும் சமவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார்.திமுக பொதுச்செயலாளரும், நீர்பாசனத்துறை அமைச்சருமான துரைமுருகன், ” அமைச்சரவையில் அனுபவம் மிக்கவர்கள், இளைஞர்களுக்கு சமமாக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை முதல் நாளிலிருந்து நிறைவேற்ற ஆரம்பித்து விட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். திமுகவின் வளர்ச்சி நன்றாக இருக்கும் ; கட்சி கட்டுக்கோப்பாக இருக்கும் ” என்றார்.

Related Stories:

>