×

பட்டிவீரன்பட்டி பகுதியில் ரேஷன் அரிசி தரமின்றி விநியோகம்-பொதுமக்கள் புகார்

பட்டிவீரன்பட்டி : பட்டிவீரன்பட்டி பகுதி ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் இலவச அரிசி தரமின்றி இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையம், சித்தரேவு, கதிர்நாயக்கன்பட்டி, தேவரப்பன்பட்டி பகுதிகளில் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. தமிழக அரசின் பொது விநியோக திட்டத்தின் கீழ் அரிசி வாங்கும் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் இலவசமாக 20 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த மே மாதத்திற்கான இலவச ரேஷன் அரிசி நேற்று முன்தினம் இப்பகுதி ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டது. இந்த அரிசி தரமின்றி வழங்கப்பட்டதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அய்யம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது, ‘கடந்த ஏப்ரல் மாதம் வழங்கிய அரிசி கறுப்பு கலந்து குருணையாகவும், தரமில்லாமலும் இருந்தது. இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்களிடம் புகார் கூறினோம். மே மாதம் நல்ல அரிசி வழங்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் மே மாதம் வழங்கிய அரிசியும், தரமில்லாமல் கறுப்பு, பழுப்பு நிறத்தில் தரமில்லாமல் உள்ளது.

மேலும் அரிசியில் கெட்டுப்போன வாடை வருகின்றது. இந்த அரிசியை உபயோகப்படுத்தவே முடியாது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் அடுத்த மாதம் போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்றனர்.

Tags : Battiwaranpi , Pattiviranapatti: The public complains that the free rice distributed in the ration shops in the Pattiviranapatti area is substandard.
× RELATED பட்டிவீரன்பட்டி அருகே 2 ஆண்டிலே தார்ச்சாலை சேதம்