காரிமங்கலம் அருகே காய்ச்சல் பரிசோதனை முகாம்

காரிமங்கலம் : காரிமங்கலம் ஒன்றியம், ஜக்கசமுத்திரம் ஊராட்சியில் காய்ச்சல் பரிசோதனை முகாம் மற்றும் கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்ச்சி நடந்தது. போடரஅள்ளிதுணை சுகாதார நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ராமச்சந்திரன் தலைமை வகித்தார். பிடிஓக்கள் ராமஜெயம், மணிவண்ணன் முன்னிலை வகித்தனர்.

வட்டார மருத்துவ அலுவலர் அனுராதா உள்ளிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு, பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை நடத்தினர். தொடர்ந்து தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தின்கீழ் பணியாற்றும் பெண்களுக்கு, கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் முருகன், ஊராட்சி செயலாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>