×

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து 33 அமைச்சர்களும் தமிழக அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்!!

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகவும், 33 பேர் அமைச்சர்களாகவும் இன்று காலை கிண்டி கவர்னர் மாளிகையில் நடைபெற்ற எளிய விழாவில் பதவி ஏற்றனர். முதலில் நீர்வளத்துறை அமைச்சராக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக கே.என்.நேருவும், கூட்டுறவுத்துறை அமைச்சராக இ.பெரியசாமியும், உயர்கல்வித்துறை அமைச்சராக க.பொன்முடியும், பொதுப் பணித்துறை அமைச்சராக எ.வ.வேலுவும், வேளாண்மைத் துறை அமைச்சராக எம்.ஆர்.கே.பன்னீர் செல்வமும், வருவாய்த் துறை அமைச்சராக ராமச்சந்திரனும் பதவியேற்றனர்.

புதிதாக பதவியேற்ற தமிழக அமைச்சர்களும் அவர்களது இலக்காக்களும்

* 15 புதுமுகங்கள்
சக்கரபாணி (உணவுத்துறை), ஆர்.காந்தி (ஜவுளித்துறை), மா.சுப்பிரமணியன் (சுகாதாரத்துறை), பி.மூர்த்தி (வணிகவரித்துறை), எஸ்.எஸ்.சிவசங்கர் (பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை), பி.கே.சேகர்பாபு (இந்து அறநிலையத்துறை), பழனிவேல் தியாகராஜன் (நிதித்துறை), ஆவடி சா.மு.நாசர் (பால்வளத்துறை), செஞ்சி கே.எஸ்.மஸ்தான் (சிறுபான்மை நலத்துறை), அன்பில் மகேஷ் பொய்யாமொழி (பள்ளி கல்வி துறை), சிவ.வீ.மெய்யநாதன் (சுற்றுச்சூழல் துறை), சி.வி.கணேசன் (தொழிலாளர் நலத்துறை), தா.மனோ தங்கராஜ் (தகவல் தொடர்பு துறை), மா.மதிவேந்தன் (சுற்றுலா துறை), என்.கயல்விழி செல்வராஜ் (ஆதிதிராவிடர் நலத்துறை) உள்ளிட்ட 15 பேர் தற்போது புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

* 19 பேர் பழைய அமைச்சர்கள்
மு.க.ஸ்டாலின் (முதலமைச்சர்), துரைமுருகன் (நீர்வளத்துறை அமைச்சர்), கே.என்.நேரு (நகர்ப்புற வளர்ச்சி துறை), இ.பெரியசாமி (கூட்டுறவு துறை), க.பொன்முடி (உயர் கல்வி துறை), எ.வ.வேலு (பொதுப்பணித்துறை), எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (வேளாண்மை துறை), கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் (வருவாய் துறை), தங்கம் தென்னரசு (தொழில் துறை), எஸ்.ரகுபதி (சட்டத்துறை), சு.முத்துசாமி (வீட்டுவசதி துறை), கே.ஆர்.பெரியகருப்பன் (ஊரக வளர்ச்சி துறை), தா.மோ.அன்பரசன் (ஊரக தொழில் துறை), மு.பெ.சாமிநாதன் (செய்தித்துறை அமைச்சர்), கீதா ஜீவன் (சமூகநலத்துறை), அனிதா ராதாகிருஷ்ணன் (மீன்வளத்துறை), ராஜகண்ணப்பன் (போக்குவரத்து துறை), கா.ராமச்சந்திரன் (வனத்துறை), செந்தில்பாலாஜி (மின்சார துறை) உள்ளிட்ட 19 பேர் ஏற்கனவே தமிழக அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள்.



Tags : TN ,Chief Minister ,BC ,Stalin ,Tamil , மு.க.ஸ்டாலின்
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...