×

கோவை, பெங்களூரூ, மங்களூர், நாகர்கோவில், திருச்சிக்கு செல்ல பயணிகள் வராததால் 74 சிறப்பு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ரயில்களில் போதுமான இருக்கைகள் நிரம்பாததால் 74 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: ரயில்களில் போதிய அளவு இருக்கைகள் நிரம்பாததால் சென்னை எழும்பூர்-காரைக்குடி (ரயில் எண் 02605) சிறப்பு ரயில் வரும் 8ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரையிலும், காரைக்குடி-எழும்பூர் (ரயில் எண் 02606) சிறப்பு ரயில் வரும் 9ம் தேதியில் இருந்து ஜூன் மாதம் 1ம் தேதி வரையிலும் ரத்து செய்யப்படுகிறது. எழும்பூர்-மதுரை (ரயில் எண் 02613) மற்றும் மதுரை-எழும்பூர் (ரயில் எண் 02614) சிறப்பு ரயில்கள் வரும் 8ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

மேலும் எழும்பூர்-மதுரை (ரயில் எண் 02635), எழும்பூர்-திருச்சி(ரயில் எண் 02653) சிறப்பு ரயில்கள் வரும் 9ம் தேதியில் இருந்து ஜூன் மாதம் 1ம் தேதி வரையிலும், மதுரை-எழும்பூர் (ரயில் எண் 02636), திருச்சி-எழும்பூர் (ரயில் எண் 02654) சிறப்பு ரயில்கள் வரும் 8ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரையிலும் ரத்து செய்யப்படுகிறது. எழும்பூர்-மதுரை (ரயில் எண் 06157) சிறப்பு ரயில் வரும் 14ம் தேதி முதல் 30ம் தேதி வரையிலும், மதுரை-எழும்பூர் (ரயில் எண் 06158) சிறப்பு ரயில் வரும் 13ம் தேதியில் இருந்து 29ம் தேதி வரையிலும் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்ட்ரல்-ஈரோடு (ரயில் எண் 02649), ஈரோடு-சென்ட்ரல் (ரயில் எண் 02650), சென்ட்ரல்-கோவை (ரயில் எண் 02673), கோவை-சென்ட்ரல் (ரயில் எண் 02674), சென்ட்ரல்-கோவை (ரயில் எண் 02679), கோவை- சென்ட்ரல் (ரயில் எண் 02680) சிறப்பு ரயில்கள் வரும் 8ம் தேதி முதல் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. சென்ட்ரல்-கோவை (ரயில் எண் 02681) சிறப்பு ரயில் 15ம் தேதியில் இருந்து 29ம் தேதி வரையிலும், கோவை-சென்ட்ரல் ( ரயில் 02682) சிறப்பு ரயில் 14ம் தேதியில் இருந்து 28ம் தேதி வரையிலும், சென்ட்ரல்-மதுரை (ரயில் எண் 06019) சிறப்பு ரயில் 10ம் தேதியில் இருந்து 28ம் தேதி வரையிலும், மதுரை-சென்ட்ரல்(ரயில் எண் 06020) ரயில் 11ம் தேதியில் இருந்து 30ம் தேதி வரையிலும் ரத்து செய்யப்படுகிறது.

அதைப்போன்று எழும்பூர்-நாகர்கோவில் இடையே இயக்கப்பட்ட (ரயில் எண் 06063) சிறப்பு ரயில் வரும் 13ம் தேதியில் இருந்து 27ம் தேதி வரையிலும், நாகர்கோவில்-எழும்பூர் இடையே இயக்கப்பட்ட (ரயில் எண் 06064) சிறப்பு ரயில் 14ம் தேதி முதல் 28ம் தேதி வரையிலும், தாம்பரம்-நாகர்கோவில் (ரயில் எண் 06191),சென்ட்ரல்-ஜோலார்பேட்டை (ரயில் எண் 06089) சிறப்பு ரயில்கள் 8ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரையிலும், நாகர்கோவில்-தாம்பரம் (ரயில் எண் 06192), ஜோலார்பேட்டை-சென்ட்ரல் ( ரயில் எண் 06090), தாம்பரம்-நாகர்கோவில் ( ரயில் எண் 06065) சிறப்பு ரயில்கள் 9ம் தேதி முதல் 31ம் தேதி வரையிலும், நாகர்கோவில்-தாம்பரம் (ரயில் எண் 06066) சிறப்பு ரயில் 10ம் தேதி முதல் ஜூன் மாதம் 1ம் தேதி வரையிலும் ரத்து செய்யப்படுகிறது.

மேலும் திருவனந்தபுரம்-சென்ட்ரல் (ரயில்எண் 02698), சென்ட்ரல்-திருவனந்தபுரம் (ரயில் எண் 02695), நெல்லை-பாலக்காடு(ரயில் எண் 06791), திருச்சி-பாலக்காடு (ரயில் எண் 06843) சிறப்பு ரயில்கள் 8ம் தேதி முதல் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் சென்ட்ரல்-திருவனந்தபுரம் (ரயில் எண் 02697), திருவனந்தபுரம்- சென்ட்ரல்(ரயில் எண் 02696), பாலக்காடு-நெல்லை (ரயில் எண் 06792), பாலக்காடு-திருச்சி (ரயில் எண் 06844) சிறப்பு ரயில்கள் வருகிற 9ம் தேதி முதல் ஜூன் மாதம் 1ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

எழும்பூர்-புதுச்சேரி (ரயில் எண் 06115) சிறப்பு ரயில் 8ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரையிலும், புதுச்சேரி-எழும்பூர் (ரயில் எண் 06116) சிறப்பு ரயில் 9ம் தேதியில் இருந்து ஜூன் 1ம் தேதி வரையிலும் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் சென்ட்ரல்-கே.எஸ்.ஆர்.பெங்களூரு(ரயில் எண் 06075), கே.எஸ்.ஆர்.பெங்களூரு (ரயில் எண் 06076), சென்ட்ரல்-கே.எஸ்.ஆர் பெங்களூரு( ரயில் எண் 06079), கே.எஸ்.ஆர். பெங்களூரு-சென்ட்ரல்(ரயில் எண் 06080) சிறப்பு ரயில்கள் வரும் 8ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

மேலும் சென்ட்ரல்-மங்களூரு (ரயில் எண் 06627), நாகர்கோவில்-மங்களூரு (ரயில் எண் 06606) சிறப்பு ரயில்கள் 9ம் தேதியில் இருந்து ஜூன் 1ம் தேதி வரையிலும், மங்களூரு-சென்ட்ரல் (ரயில் எண் 06628), மங்களூரு-நாகர்கோவில் (ரயில் எண் 06605) சிறப்பு ரயில்கள் 8ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரையிலும் ரத்து செய்யப்படுகிறது.

திருவனந்தபுரம்-மங்களூரு (ரயில் எண் 06347), எர்ணாகுளம்-கே.எஸ்.ஆர் பெங்களூரு (02678), கொச்சுவேலி-மங்களூரு(06355) சிறப்பு ரயில்கள் வரும் 8-ம்தேதி முதல் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. மங்களூரு-திருவனந்தபுரம் (06348), கே.எஸ்.ஆர் பெங்களூரு-எர்ணாகுளம்(02677), எர்ணாகுளம்-பனாஸ்வாடி(06161) மங்களூரு-கொச்சுவேலி(06356) சிறப்பு ரயில்கள் 9ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் பனாஸ்வாடி-எர்ணாகுளம் (06162) சிறப்பு ரயில் 10ம் தேதி முதல் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

சென்ட்ரல்-திருப்பதி (06095), திருப்பதி-சென்ட்ரல் (06096) சிறப்பு ரயில்கள் வரும் 8ம் தேதி முதல் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. அதைப்போன்று சென்ட்ரல்-நிசாமுதீன் (06151) சிறப்பு ரயில் 15ம் தேதி முதல் 29ம் தேதி வரையிலும், நிசாமுதீன் சென்ட்ரல் (06152) சிறப்பு ரயில் 17ம் தேதி முதல் 31ம் தேதி வரையிலும், திருவனந்தபுரம்-நிசாமுதீன் (06167) சிறப்பு ரயில் 11ம் தேதி முதல் 25ம் தேதி வரையிலும், நிசாமுதீன்-திருவனந்தபுரம்(06168) சிறப்பு ரயில் 14ம் தேதி முதல் 28ம் தேதி வரையிலும் ரத்து செய்யப்படுகிறது.

மேலும் திருவனந்தபுரம்-எர்ணாகுளம் (06304), ஆலப்புலா-கொல்லம்(06013), கொல்லம்-ஆலப்புலா (06014), எர்ணாகுளம்-ஆலப்புலா (06015), ஆலப்புலா-எர்ணாகுளம் (06016), சோரணூர்-எர்ணாகுளம் (06017), எர்ணாகுளம்-சோரணூர் (06018), சோரணூர்-கண்ணூர் (06023), கண்ணூர்-சோரணூர் (06024), சோரணூர்-திருவனந்தபுரம் (06301), திருவனந்தபுரம்-சோரணூர் (06302) சிறப்பு ரயில்கள் வரும் 8ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. எர்ணாகுளம்-திருவனந்தபுரம் (06303), திருவனந்தபுரம்-கண்ணூர்(02083) சிறப்பு ரயில்கள் 9ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. மேலும் கண்ணூர்-திருவனந்தபுரம் (02081) சிறப்பு ரயில் 10ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


18 சிறப்பு ரயில் சேவை தற்காலிகமாக ரத்து

முன்பதிவில்லாத 18 சிறப்பு ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேட்டுப்பாளையம் - கோவை இடையே இயக்கப்பட்ட (ரயில் எண் 06009), அரக்கோணம்-ஜோலார்பேட்டை (06085), ஜோலார்பேட்டை-அரக்கோணம் (06085), விருத்தாசலம்-சேலம் (06121), சேலம்-விருத்தாசலம் (06121), திருச்சி-கரூர் (06123), திருச்சி-காரைக்குடி (06125), விழுப்புரம்-மதுரை (06867), எழும்பூர்-புதுச்சேரி (06025), புதுச்சேரி-எழும்பூர் (06026) ஆகிய முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் 8ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

அதேபோன்று தாம்பரம்-விழுப்புரம் (06027), காரைக்குடி-திருச்சி (06126), கரூர்-திருச்சி (06124), மதுரை-விழுப்புரம் (06868) சிறப்பு முன்பதிவில்லா ரயில்கள் 9ம் தேதி முதல் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. விழுப்புரம்-தாம்பரம் (06028), சேலம்-அரக்கோணம் (06088), அரக்கோணம்-சேலம் (06087) இடையே இயக்கப்பட்ட முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் 10ம் தேதி முதல் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுறது.



Tags : Coimbatore ,Bangalore ,Mangalore ,Nagercoil ,Trichy ,Southern Railway , 74 special trains canceled due to non-arrival of passengers to Coimbatore, Bangalore, Mangalore, Nagercoil and Trichy: Southern Railway
× RELATED கோடை விடுமுறையையொட்டி தாம்பரம்-மங்களூரு சிறப்பு ரயில்