×

விமான பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்குவதை விரைவுபடுத்துங்கள்: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

புதுடெல்லி:   விமான பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்குவதை விரைவுபடுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:   
 இந்திய விமான போக்குவரத்து ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 100 விமான நிலையங்கள் உள்ளன. இவற்றில் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் விமான போக்குவரத்து பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்குவதை விரைவுபடுத்த  அறிவுறுத்தப்படுகிறது.
 தடுப்பூசி வழங்கலுக்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கு, விமான நிலையத்தின் இயக்குநர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தடுப்பூசி வழங்குவதற்கான மையத்தை விமான நிலையத்திலேயே அமைக்க வேண்டும்.

 தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதற்காக விமானம் நிலையம் அமைந்துள்ள சம்மந்தப்பட்ட மாநில அரசு அல்லது தடுப்பூசி வழங்கும் தனியார் மருத்துவமனைகளை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும்.
 விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள், விமானிகள், பணிப்பெண்கள் மற்றும் பயணிகளை எதிர்கொள்ளும் ஊழியர்கள் ஆகியோருக்கு இதில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

 சிறு விமான நிலையங்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் அல்லது உள்ளூர் நிர்வாகத்தை தொடர்பு கொள்ளுங்கள்.
 தடுப்பூசி வழங்கும் முயற்சிகளை ஒருங்கிணைக்க விமான நிலையத்தின் சார்பில் கண்காணிப்பு அதிகாரியையும் நியமிக்க வேண்டும்.

Tags : Federal Government , Accelerate vaccination of flight attendants: Guidelines issued by the Federal Government
× RELATED டெல்லியில் மீண்டும் போராட்டம் நடத்த...