×

பாதுகாப்பை மீறி கொரோனா! எப்படி என்று தெரியவில்லை: சவுரவ் கங்குலி

மும்பை: ‘கடுமையாக கடைபிடிக்கப்பட்ட கொரோனா  தடுப்பு உயிர் பாதுகாப்பு குமிழியில் கொரோனா எப்படி நுழைந்தது என்று சொல்வது கடினம்’ என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ஐபிஎல் அணிகளின் வீரர்கள் அடுத்தடுத்து கொரோனா  தொற்றுக்கு ஆளானதையடுத்து நடப்பு ஐபிஎல் தொடர் காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க வீரர்கள் உயிர் பாதுகாப்பு குமிழ்(பயோ  பபுள்)-ல்  வைத்து கண்காணிக்கப்பட்டனர். இப்படி வீரர்கள் ஜிபிஆர்எஸ், டிஜிட்டல் முறைகளில் கண்காணிக்கப்பட்டும் தொற்றுக்கு ஆளானது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

இது குறித்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நேற்று, ‘எங்களுக்கு கிடைத்த அறிக்கையின் படி எந்த இடத்திலுலும் பாதுகாப்பு நடைமுறைகளில் மீறல் ஏற்படவில்லை. அதையும் மீறி உயிர் குமிழியில் எங்கு பாதிப்பு ஏற்பட்டது? எப்படி  வீரர்களுக்கு தொற்று ஏற்பட்டது? என்பது சொல்வது கடினம்.  நாட்டில் இத்தனை பேர் எப்படி தொற்றுக்கு ஆளாகிறார்கள் என்று சொல்வது கடினம். நடப்பு ஐபிஎல் தொடர்  ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ரத்து செய்யப்படவில்லை. எஞ்சிய  ஆட்டங்களை நடத்தவதற்காக வாய்ப்பு, இடம் குறித்த ஆலோசிக்கப்படும்’ என்று கூறியுள்ளார்.

Tags : Corona ,Saurav Ganguly , Corona in violation of security! Don't know how: Saurav Ganguly
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...