உ.பி தேர்தலில் சமாஜ்வாதி அபாரம்

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் 4 கட்டங்களாக நடந்த உள்ளாட்சி தேர்தலில், மொத்தம் 3.27 லட்சம் பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பொதுவாக இத்தேர்தலில் கட்சிகளின் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுவதில்லை என்றாலும், பெரும்பாலும் ஏதாவது ஒரு கட்சியின் ஆதரவுடன்தான் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் உறுப்பினர் பதவிகளுக்கு, எதிர்க்கட்சியான சமாஜ்வாதி ஆதரவு பெற்ற 742 பேர், ஆளும் பாஜகவின் 679 பேர், பகுஜன் சமாஜ் கட்சியின் 320 பேர், காங்கிரஸ் கட்சியின் 270 வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். இந்த தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>