கும்மிடிப்பூண்டியில் பாஜக ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி: மேற்கு வங்காளத்தில் ஆட்சியை தக்க வைத்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் பாஜக தொண்டர்கள் கொல்லப்படுவதாக கூறி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அரசை கண்டித்து கும்மிடிப்பூண்டியில் பாஜகவினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கும்மிடிப்பூண்டியில் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக நிர்வாகி ஜம்புலிங்கம் தலைமை தாங்கினார்.

சந்தோஷ்பாபு முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில், மேற்கு வங்காளத்தில் பாஜக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை கொலை செய்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரை கைது செய்ய வேண்டும் என்றும், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுதல் அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

Related Stories:

>