கும்பக்கரையில் வெள்ளப்பெருக்கு: குளங்களுக்கு நீர்வரத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி

பெரியகுளம்: தொடர்மழையால் பெரியகுளம் கும்பக்கரை அருவியில் 3வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ளது கும்பக்கரை அருவி. கொரோனா பரவலால் இங்கு குளிக்க சுற்றுலாப்பயணிகள், பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாக மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதியில் மாலை, இரவு நேரத்தில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் கடந்த 2 நாட்களாக கும்பக்கரை அருவிக்கு நீர் வரத்து அதிகரித்து, நேற்று முன்தினம் முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து பெய்து வரும் கோடை மழையால் 3வது நாளாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கின் காரணமாக கும்பக்கரை அருவிக்கு கீழே உள்ள குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: