அமெரிக்கர்கள் யாரும் இந்தியா செல்ல வேண்டாம்; மீறினால் கடும் நடவடிக்கை: அமெரிக்க உள்துறை அமைச்சகம் அறிக்கை

வாஷிங்டன்: அமெரிக்கர்கள் யாரும் இந்தியா செல்ல வேண்டாம் என அமெரிக்க அரசு மீண்டும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவுக்கு அமெரிக்க மக்கள் யாரும் பயணிக்க வேண்டாம் என லெவல்-4 எச்சரிக்கையை அமெரிக்க அரசு நேற்று வெளியிட்டுள்ளது. லெவல்-4 எச்சரிக்கை என்பது அமெரிக்க மக்கள் பயணம் குறித்த உச்ச கட்ட எச்சரிக்கையாகும். இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து வருவதால், அமெரிக்க மக்கள் யாரும் இந்தியாவுக்கு பயணிக்க வேண்டாம்  என அமெரிக்க உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளத. இந்தியாவிலிருந்து வெளியேற நினைக்கும் அமெரிக்க மக்களும் வெளியேறுங்கள் எனவும் கூறியுள்ளது. 

கடந்த மாதம் 28-ம் தேதி அமெரிக்க அரசு வெளியிட்ட எச்சரிக்கையில், அமெரிக்காவைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் இந்தியாவில் பணியாற்றும்போது அவர்கள் குடும்பத்துடன் வெளியேற வாய்ப்பளித்தது. கடந்த மாதம் இந்தியாவில் இருந்து வரும் அமெரிக்க  வம்சாவழிகள் யாரும் அமெரிக்க வர வேண்டாம் என கூறியிருந்தது. மேலும் மீறி வந்தால் கடும் நடவடிக்கைகள் எடுப்பதோடு அபராதமும், சிறை தண்டனையும் விதிக்கப்படும் என கூறியிருந்தது.

Related Stories:

>